ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா? பிரதமர் வெளியிட்ட தகவல்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்பட வேண்டுமானால், பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் மாகாண கல்வித் தலைவர்களை சந்தித்த அவர், நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்.
அந்த நிகழ்வில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் இரத்து செய்யுமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், அது பிள்ளைகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
ஆனால், இதை நிறைவேற்றுவதற்கு பாடசாலைகளுக்கு இடையிலான இடைவெளியை மூட வேண்டும் என்றார்.
மேலும், கல்வி பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காமல் சட்ட ரீதியாகவோ அல்லது கொள்கை ரீதியாகவோ தீர்மானங்கள் எடுக்கப்பட்டால், நாட்டில் நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க பொதுப் பரீட்சை முறையின் கீழ் பரீட்சையை எதிர்கொள்ளும் பிள்ளைகளுக்கு பொதுவான கல்வி முறையை கொண்டு வர முயற்சிக்கின்றோம் என்றும், முடிவெடுக்கும் பொறிமுறையை வலுப்படுத்த முயற்சிக்கின்றோம் என அவர் கூறினார்.
இது தனிப்பட்ட அரசியல்வாதி, அமைச்சர் அல்லது செயலாளரின் முடிவுகளுக்காக அல்ல, தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட இருக்கும் முடிவுகளுக்கான செயல்முறையை அமைக்க முயற்சிக்கின்றோம் என்று அவர் தெரிவித்தார்.