எதிர்வரும் (2022) பெப்ரவரி மாதம் வரை மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன (Sulakshana Jayawardena) தெரிவித்துள்ளார்.
தற்போது எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டாலும் நீர் மூலமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.
இதனால், நாடு எரிபொருள் நெருக்கடியை சந்தித்தாலும், மாற்றாக நீர் மின்சாரம் செயற்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்து ஆண்டு (2022) பெப்ரவரி மாதத்தில் இருந்து இலங்கையில் வறட்சியான காலநிலை பதிவாகும். அதுவரை மின்வெட்டு ஏற்படாது என குறிப்பிடப்படுகின்றது.