தரம் 6 பாடப்புத்தகத்தில் தவறான இணைய முகவரி: மகாநாயக்க தேரர்களிடம் பிரதமர் ஹரிணி அமரசூரிய விளக்கம்!
தரம் 6 மாணவர்களுக்கான மாதிரிப் பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற பாரிய தவறு குறித்து நிலவி வரும் சர்ச்சைகளுக்குப் பிரதமர் ஹரிணி அமரசூரிய முற்றுப்புள்ளி வைத்துள்ளார். கண்டிக்கு விஜயம் செய்த அவர், அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
குறித்த தவறுடன் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் மாணவர்களின் கைகளுக்குச் செல்லவில்லை என்பதையும், அவை அனைத்தும் தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பில் சீல் வைக்கப்பட்டுள்ளதையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தவறு எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விரிவான உள்வாரி விசாரணை நடைபெற்று வருகின்றது.

தனியார் நிறுவனங்களின் தலையீட்டைக் குறைத்து, பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகளை இனி கல்வி வெளியீட்டுத் திணைக்களம் நேரடியாகக் கண்காணிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்கிரிய பீடத்தின் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோரைச் சந்தித்த பிரதமர், கல்வி மறுசீரமைப்பின் போது நாட்டின் கலாச்சாரம் மற்றும் மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என உறுதியளித்தார்.





