Welcome to Jettamil

CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித! விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பிலவும் ஆஜர்

Share

CIDயில் இருந்து வௌியேறினார் யோஷித!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) இருந்து வௌியேறியுள்ளார்.

சுமார் 2 மணிநேரம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கிய பிறகு, அவர் அங்கிருந்து வௌியேறினார். இன்று காலை 10 மணியளவில் கதிர்காமம் பிரதேசத்தில் காணி உரிமை தொடர்பாக அவர் வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

மேலும், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவும் இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். அவரை, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சின் காலத்தில் ஏற்பட்ட முறைகேடு சம்பந்தமான விசாரணைகளுக்காக அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவும் இன்று குற்றவியல் புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். அவர் ஆஜரான காரணங்கள் பற்றிய விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை