பாடசாலை மாணவியை காப்பாற்ற போராடிய இளைஞன் – வீடியோ
கண்டி மாவட்டத்தில் உள்ள கெலிஓயா தவுலகலைப் பகுதியில் ஒரு பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைப் பற்றி முரணான தகவல்கள் வெளிவந்துள்ளன. 19 வயதான மாணவியை கடத்திச் சென்ற சந்தேகநபர், ஆரம்பத்தில் 5 மில்லியன் ரூபாயை கப்பமாக கோரியதாக உறவினர்கள் தெரிவித்தனர். பின்னர், அந்த இளைஞன் அந்த தொகையை 3 மில்லியன் ரூபாயாக குறைத்ததாக கூறப்படுகிறது.
சந்தேகநபர் குறித்த மாணவிக்கு “மச்சான் முறை” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியை காப்பாற்ற ஒரு துணிவான இளைஞன் போராடியதை CCTV வீடியோவில் தெளிவாக காண முடிகிறது. இந்த இளைஞன் காப்பாற்றும் போது வேனில் தொங்கிச் சென்று சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்.