Welcome to Jettamil

உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்து கொத்தாக மடியும் வடகொரிய வீரர்கள்

Share

உக்ரைனுக்கு எதிரான போரில் கொத்து கொத்தாக மடியும் வடகொரிய வீரர்கள்

உக்ரைனுக்கு எதிரான போரில் 300 வடகொரிய வீரர்கள் பலியாகி, 2,700 பேர் காயமடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரிய நாடாளுமன்ற உறுப்பினரான லீ சியாங்-வீ இத் தகவலை வெளியிட்டார். அவர், இது குறித்து நிருபர்களிடம் பேசும்போது, வடகொரிய வீரர்களின் மரணம் தொடர்பான தகவலை கூறினார். மேலும், ரஷ்யாவுக்கு ஆதரவாக குவிக்கப்பட்ட வடகொரிய வீரர்கள் குர்ஸ்க் பகுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

என்.ஐ.எஸ். துறையின் ஆய்வின்படி, நவீன போர் கருவிகளைப் பற்றி வடகொரிய வீரர்களுக்கு எந்தவொரு தெளிவான புரிதலும் இல்லை என்று கூறப்படுகிறது. போதிய பயிற்சி இல்லாத அவர்களை ரஷ்யா பயன்படுத்தி கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.

அந்த வகையில், வடகொரிய வீரர்களுக்கு அதிகளவில் காயங்கள் மற்றும் மரணங்கள் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ரஷ்ய போர் நிலவரத்தில், 2 வடகொரிய வீரர்களை உக்ரைன் சிறை பிடித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. “நாங்கள் அவர்களை விடுவிக்க தயாராக இருக்கிறோம்,” என உக்ரைனின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக, உக்ரைனிய கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை