Jet tamil
இலங்கையாழ்ப்பாணம்

அடிகாயங்களுடன் கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட இளைஞன் – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

IMG 20241104 WA0013

அடிகாயங்களுடன் கட்டைக்காட்டில் மீட்கப்பட்ட இளைஞன் – அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி!

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு (03.11.2024) இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கட்டைக்காடு பகுதியில் உள்ள மதுபானசாலையை அண்மித்த மதகு பகுதியில் இளைஞன் ஒருவன் அடி காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் மீது சரமாரியான தாக்குதல் நடாத்தப்பட்டே வீசப்பட்டிக்கலாம் என பிரதேச மக்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு சென்றிருந்த மருதங்கேணி பொலிசார் தாக்குதலுக்குள்ளான இளைஞனை மீட்டு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான இளைஞனுக்கு நீதிமன்றில் பல்வேறு வழக்குகளும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் உள்ளதாகவும், முன்பகை காரணமாக குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸ் நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment