இன்ஸ்டாகிராமின் அசத்தல் அப்டேட்
மெட்டா நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் செயலியில் புதிய வசதி தொடர்பான தகவல்கள் வலைதளத்தில் பரவி வருகின்றன. ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் முகப்பை (Profile) ஸ்டோரியில் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தும் பணியில் மெட்டா இருப்பதாகக் கூறப்படுகிறது.
பயனாளர்கள் தங்களுக்கு விருப்பமான இன்ஸ்டாகிராம் பக்கங்களுக்கு தங்களது ஆதரவினைத் தெரிவிக்க, தங்களது ஸ்டோரியில் அவர்களது முகப்பைப் பகிர இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். ஸ்டோரியில் பகிரப்படும்போது முகப்பில் அந்த பயனாளரின் மூன்று சமீபத்திய பதிவுகள் காட்டப்படும் எனவும் கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பு வராத நிலையில், இந்த அம்சத்தின் விவரங்கள் எல்லாம் வலைதளத்தில் பகிரப்பட்டுவருகின்றன.
சமீபத்தில் சாம்சங், ஜிடிஏ (GTA) போன்ற நிறுவனங்களின் எதிர்காலத் திட்டங்கள் வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த தகவலும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.