பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சிவில் அமைப்பினரின் ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் இடம்பெறவுள்ளதுடன், இந்த தொடர் போராட்டத்திற்கு சகல தமிழ் தேசிய அரசியற் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தமது தமது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மையினரின் நில அபகரிப்பு, அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம், முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது, மலையக மக்களின் ஆயிரம் ரூபாய் சம்பளம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை முன்னிறுத்தி இந்த பேரணி ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம், இந்த போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முஸ்லீம் தலைவர்களும் அழைப்பு கோரிக்கை விடுத்துள்ளார்.
பொத்துவில் முழுவதும் இராணுவத்தினர் குவிக்கப் பட்டு இராணுவ வலயமாக பொத்துவில் நகர் மாற்றப்பட்டுள்ளது, பொத்துவிலிற்கு செல்லும் வீதிகளிலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பல்வேறு பகுதிகளில் திடீர் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சோதனைச்சாவடியை கடப்பவர்கள் வழிமறிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம் பெறுகிறது.