வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்த புதிய நிபந்தனைகளினை நிராகரிப்பு செய்த இலங்கை வட்ஸ்அப் பயனாளர்களின் பல்லாயிரக் கணக்கானோரின் கணக்குகள் முடங்கும் அபாயத்தில் காணப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் கருத்தொன்றை வெளியிட்டுள்ளது .
இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும், எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைவரது கணக்குகளும் இனிமேல் குறுந்தகவல் பெறவோ அல்லது தகவல்களை அனுப்பவோ முடியாது போகும் என வாட்ஸ்அப் அறிவித்துள்ளது .
புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு தற்காலிகமாக வரையறுக்கப்பட்ட அளவில் நேர அழைப்பு மற்றும் அறிவிப்புகள் மட்டுமே கிடைக்கும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது .
இதற்குப் பின்னரும் புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களுடைய கணக்குகள் அனைத்தும் செயலற்ற கணக்குகள் எனும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்படுமாம்.