இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் லக்குமார் பெர்ணான்டோ தெரிவிக்கின்றார்.
அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை சுகாதார தரப்பின் ஆலோசனைகளை மீறி, 14 நாட்களுக்கு முன்னரே தளர்த்தும் பட்சத்தில்,
கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் நூற்றுக்கணக்காக அதிகரிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
நாட்டில் இதற்கு முன்னர் அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடானது, முன்னோடியாக செயற்படுத்தி பார்த்த ஒன்று எனவும், அந்த பயணக் கட்டுப்பாட்டில் எந்தவித விஞ்ஞான ரீதியான நடைமுறைகளும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு அமல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு இடை நடுவில் தளர்த்தப்பட்டதாகவும், அவ்வாறு தளர்த்தப்பட்டமையானது ஒரு வகையில் குற்றம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.