கவலையை விடுங்கள். 2021 ம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்னும் சில மாதங்களில் கோரப்படவுள்ளன.
இக்காலத்தில் ஒரு அரச பணியினை பெறுவதாயினும் சரி அல்லது ஒரு வெளிவாரி பட்ட பாடநெறியினைப் பயில்வதற்கு சரி உயர்தரத்தில் மூன்று பாட சித்தி அவசியமானதாகும்..
உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு உதயர்தர சித்தி மிக மிக அவசியமானதாகும். ஆகவே இந்தவருட வாய்ப்பினை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ளுங்கள், அத்துடன் இற்றிலிருந்தாவது உங்களை நீங்கள் தயார்படுத்த ஆரம்பியுங்கள் அது நிச்சயம் சிறந்த பயனை உங்களுக்கு தரும்.
விண்ணப்பிக்கும் முறை :-
உங்கள் துறையில் உள்ள 3 பாடங்களுக்கு விண்ணப்பிப்பதுடன் கட்டாயம் பொது நுண்ணறிவு வினாத்தாளுக்கும் விண்ணப்பியுங்கள். காரணம் வெளிவாரி பாட நெறிகளுக்கு & HND பாடநெறிகளுக்கு பொது நுண்ணறிவு வினாத்தாளில் 30 புள்ளி பெற்றிருப்பது அவசியமானதாகும்.
படிக்கும் முறை :-
பரீட்சைக்கு 7 மாதங்கள் அழகாக உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியது 3 பாடங்களுக்குமான Notes களினை 2019 அல்லது 2020 இல் உயர்தரம் படித்த நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகளிடம் பெற்றிக்கொள்ளுங்கள்.
சுயமாகவே கற்றுக்கொள்ளுங்கள் வகுப்புகளுக்கு செல்லவேண்டிய அவசியமில்லை (வகுப்புக்கு செல்லும் மனநிலை பலருக்கு இருக்க வாய்ப்பில்லை ) பாட விளக்கங்களுக்கு நண்பர்களின் உதவியை நாடுங்கள்.
சுய கற்றலுக்கான வழிகள் :-
*பேஸ் புக் தளத்தில் கல்வி சார் குழுக்களில் இணைந்து உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொள்ளலாம்.
*யூ டியூப் இல் உங்கள் சந்தேகங்களை தேடி படித்துக்கொள்ளலாம்.
*www.nie.lk இவ் இணையத்தளத்தில் நீங்கள் விரும்பிய மொழியில் உங்களுக்கு தேவையான ஆசிரியர் கையேட்டு நூல்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
*தற்போழுது ஆன்லைன் வகுப்புக்களில் இலகுவாக இணைந்து கல்வி பயிலும் வாய்ப்பும் அதிகளவில் கொட்டிக்கிடக்கின்றது.
பரீட்சையை சிறப்பாக எழுதுங்கள். டிசம்பர் இறுதி வாரத்தில் உங்கள் பரீட்சை முடிவு வெளியாகும்.
அடுத்த வருடம் [2022] வெளிவாரி பட்டம் அல்லது HND பாடநெறிகளுக்கு விண்ணப்பித்து கற்றுக்கொள்ளுங்கள்.
நான்கு வருடத்தில் நீங்கள் ஒரு பட்டதாரியாக மிளிர முடியும். வாய்ப்புக்கள் நிறைந்துள்ளன. முயற்சியை அதிகப்படுத்துங்கள். உங்கள் வாழ்கை உங்கள் கையில்.
இப்பதிவு யார் மனதையும் புண்படுத்த எழுதப்படவில்லை. சிறு விழிப்புணர்வுக்காக பதியப்பட்டது.முடிந்தால் மற்றவர்களுக்கும் பகிருங்கள்.
கீழ் உள்ள காணொளி உங்கள் மன உறுதியை வரவைக்க உங்களுக்காக சமர்ப்பிக்கின்றேன்…
“முயற்சி உடையார் இகழ்ச்சியடையார்”
நன்றி.
By :- Kumaran Sharma