எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் AL பரீட்சைப் பெறுபேறுகளை வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் தெரிவித்துள்ளார்.
AL பரீட்சையில் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை விரைவில் பல்கலைக் கழகங்களுக்கு உள்ளீர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆகவே ஏப்ரலில் வௌியிடப்படும் AL பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவுசெய்யப்படும் மாணவர்களை வரும் செப்டம்பர் மாதத்திலேயே பல்கலைக் கழகங்களில் இணைத்துக்கொள்ள உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் ஆண்டுக்கான OL பரீட்சை நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இதன் பெறுபெறுகள் எதிர்வரும் ஜூனில் வௌியிட எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.