கனடா நாட்டில் கொவிட் 19 தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் 2956 பேர் பாதிக்கப்பட்டதோடு 29 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட 22 ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரையில் மொத்தமாக வைரஸ் தொற்றினால் 9,09,157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22,463பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 31,674 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 543 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுவருகின்றன.
இதுவரை 8,55,020 பேர் இவ் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.