Jet tamil
இலங்கைவானிலை

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் கன மழை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று (07) முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும். மற்றைய பகுதிகளில் பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும், மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.

இந்நிலையில், இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

புகையிரத விபத்தில் இருவர் உயிரிழப்பு!

kajee

மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

kajee

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

சந்நிதியான் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் கெருடபுராணம் எனும் தலைப்பில் ஆண்மீக உரை

Sinthu

இளம் தலைவர்களை ஒன்றிணைத்து சுதந்திரக் கட்சியை மீளக் கட்டியெழுப்பத் தயார்! சந்திரிக்கா அதிரடி அறிவிப்பு

jettamil

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

Leave a Comment