Welcome to Jettamil

கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் OL பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

Share

கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியிலும் இன்றைய தினம் (01.03.2021) 2020ம் ஆண்டுக்கான OL பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

எதிர்வரும் பத்தாம் திகதி வரை நடைபெறவுள்ள இப் பரீட்சையில் 6,22,352 பேர் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர்களில் 4,33,746 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் என்பதுடன் இப் பரீட்சைக்காக நாடு முழுவதும் 4513 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சகல மாவட்டங்களிலும் குறைந்த பட்சம் இரண்டு விசேட பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளின் பிரகாரம் சுகாதார வழிமுறைகள் பேணப்பட்டு பரீட்சைகள் இடம்பெறுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சையின் போது ஒவ்வொரு பரீட்சை நிலையத்திற்கும் வழமைபோன்று மேற்பார்வையாளர்கள் நோக்குனர்களுக்கு மேலதிகமாக கொவிட் தொற்றுத் தொடர்பில் விசேட நோக்குனரொருவரும் நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொவிட் தொடர்பான சகல நடவடிக்கைகளுக்கும் அவ் விசேட நோக்குனர் பொறுப்பாகவிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் குடும்பங்களில் இருந்து வரும் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைக்காக தனியான ஒழுங்கு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகவுள்ள இப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் மற்றும் பரீட்சை நிலையங்களில் கடமையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு விசேட பேருந்து சேவை வசதியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை