எதிர்வரும் பெப்ரவரி 15 ம் திகதி மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு இரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, நாட்டின் அனைத்து பாடசாலைகளும் 2021 மார்ச் 15 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பகா மாவட்டங்களில் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கான பரிந்துரைகள் முன்பே தீர்மானிக்கப்பட்டன.
சுகாதார அதிகாரிகள் அனுமதி அளித்த பின்னர், மேல் மாகாணத்தின் பெரும்பாலான பள்ளிகள் பெப்ரவரி 15 ஆம் திகதி திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அண்மையில் தெரிவித்தார்.
அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் மொத்த பாடசாலைகளின் எண்ணிக்கை 492 ஆகும், கம்பஹா மாவட்டத்தில் 589 பாடசாலகளும், களுத்துறை மாவட்டத்தில் 442 பாடசாலைகளும் எந்த பிரச்சனையும் இல்லை என்று மாவட்டஅபிவிருத்திக் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.