சிறுத்தைக்கு பயந்து இரண்டு நாட்களாக மரத்தில் இருந்த வயோதிபர்
காட்டுப் பகுதிக்கு விறகு வெட்டச்சென்ற போது சிறுத்தையிடம் இருந்து தப்பித்துக்கொள்ள மரத்தின் மீது ஏறிய நபர் 2 நாட்களின் பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
மன்னம்பிட்டி – மாகந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஒருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இவர் மாகந்தோட்டை காட்டுப் பகுதியில் விறகு வெட்டச்சென்ற போது அங்கு இருந்த சிறுத்தையிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார்.
இந்நிலையில் அப்பகுதியில் சூழ்ந்த வெள்ளத்தால் இரண்டு நாட்களாகியும் அவர் மரத்திலேயே தங்கியிருந்துள்ளார்.
இதனையடுத்து இவர் பிரதேசவாசிகளின் உதவியுடன் காப்பாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.