சுழிபுரம் – சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளையதினம் இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கை ஊடாக அழைப்பு விடுத்துள்ளார். அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
சுழிபுரத்தில் கடற்படையினரால் சவுக்கடிப் பிள்ளையார் கோயிலடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்றக்கோரி, நாளை வெள்ளிக்கிழமை (08.03.2024) மு.ப 10.30 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் சவுக்கடிப் பிள்ளையார் கோயில் முன்பாக நடைபெறவுள்ளது.
எனவே அனைவரும் திரண்டு பேராதரவு தருமாறு அன்புரிமையோடு வேண்டுகின்றோம் – என்றுள்ளது.