இன்றைய தினம் ( 22 ) மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு உலருணவு அல்லாத அத்தியாவசிய பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இவ் நிகழ்வானது வெல்லன் விநாயக ஆலய தலைவர் திரு இ.இராகவன் இன் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்விற்கு இலங்கை செஞ்சிலுவை சங்க நிர்வாக சபை உறுப்பினர் ச.திரவியராஜா,
யாழ்மாவட்ட செஞ்சிலுவைச்சங்க உறுப்பினர் பிரகாஸ், j/366 கிராம சேவையாளர் க.பிரேந்திரா, அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மற்றும் மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழக நிர்வாகத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்வாறு பல சமூக சேவைகளில் மத்தொனி இளைஞர் விளையாட்டுக்கழகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் என கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.