வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொலிகண்டியை வந்தடைந்தது பொத்துவில் – பொலிகண்டிப் பேரணி
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி பல்லாயிரக் கணக்கானோரின் ஆதரவுடன் பொலிகண்டியைச் சென்றடைந்ததுடன் ஐந்து நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பேரணி நிறைவுக்கு வருகிறது.
இந்நிலையில், அங்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டு பேரெழுச்சிப் போராட்டம் இடம்பெறுவதுடன், பேரணியின் நினைவாக குறித்த பகுதியில் மரக்கன்றும் அத்துடன் நினைவுச்சின்னம் என்பனவும் நாட்டப்பட்டது.
அனைவரையும் சிறப்பாக வரவேற்று அனைவருக்கும் உணவுகள் தண்ணீர்ப்போத்தல்கள் என்பனவும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.