இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் நேற்று (வியாழக்கிழமை) ஒரே நாளில் 18940 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 10,720,971 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 10,393,162 குணமடைந்துள்ளனர்.
1,73,762 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெறுகின்ற நிலையில் 8000 அதிகமானோர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஒரே நாளில் 162பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,54,047 ஆக அதிகரித்துள்ளது.