நகரசபை திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவில் புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு
மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு ஏறாவூர் நகரசபையின் திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு ஊழியர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தாண்டை வரவேற்கும் நிகழ்வு வாவிக்கரை வீதி திண்மக்கழிவு முகாமைத்துவப் பிரிவு அலுவலகத்தில் இன்று (04) இடம் பெற்றது.
தலைமை சுகாதார மேற்பார்வையாளர் எம். எச் ஐனுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபை செயலாளர் எம்.எச்.எம். ஹமீம், நிருவாக உத்தியோகத்தர் திருமதி நபீறா றசீன், வருமானப் பரிசோதகர் என். வாஹித், தொழில்நுட்ப உத்தியோகத்தர் கே.லவகுமார் உட்பட அதிகாரிகளும் சுகாதார ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
புத்தாண்டை முன்னிட்டு சுகாதார ஊழியர்களினால் இனிப்புப் பண்டங்கள் பரிமாற்றப்பட்டதுடன் புத்தாண்டு கை விசேட நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.