முகக்கவச தடைச்சட்டம் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா, நிகாப் போன்றவை தடை செய்யப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தில் ஏற்கனவே கையொப்பம் இட்டுள்ளதாகவும், அடுத்த கட்டமாக அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தேசிய பாதுகாப்பு செயற்பாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.