நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன என நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
இராணுவ மருத்துவமனையில் இந்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி 224 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகள் இன்று முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை செலுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அனைத்து சிறைச்சாலைகளிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐயாயிரத்து 100 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவுக்கு ஏற்கனவே இந்த தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.