தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும் சில சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் பிற குறிப்பிட்ட கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் காலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் உத்தரவை மீறும் மதுபானக் கடைகளின் உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.