பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு கோண்டாவிலில் இடம்பெற்றது
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் சமகால அரசியல் அரங்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) கோண்டாவில் வேதபாராயண சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்வுரையரங்கு தமிழ் அரசியல் நோக்கில் என்பதைத் தொனிப்பொருளாகக்கொண்டு இடம்பெற்றுள்ளது.
உத்தேச கடற்சட்டத்திருத்த வரைவு என்னும் தலைப்பில் சமூகச் செயற்பாட்டாளர் இரேனியஸ் செல்வின், புத்தாண்டை எதிர்கொள்ளல் என்னும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் மற்றும் இமாலயப் பிரகடனம் எனனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறைத்தலைவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ஆகியோர் தமிழ் அரசியல் நோக்கு நிலையில் இருந்து உரையாற்றியிருந்தனர்.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் இலங்கை மற்றும் சர்வதேச அளவில் அரசியலில் முக்கியத்துவம் பெறும் விடயங்கள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகச் சமகால அரசியல் உரையரங்கு என்னும் நிகழ்ச்சியைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.