பதுளை – பசறை பகுதி 13ம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற பாரிய பேருந்து விபத்தில் 14 பேர் பலியாகினர். அத்துடன் பலரின் நிலை பரிதாபமான. நிலையில் காணப்படுகின்றது.
விபத்தில் 31 பேர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
லுணுகலையில் இருந்து புறப்பட்டு கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்றே, 13ம் கட்டைப் பகுதிகுயில் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை வேளையில் விபத்துக்குள்ளானது.
குறித்த. பேருந்து பாரிய பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகிமையால் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெருமளவில் சிரமம் நிலவுவதாக
கூறப்படுகிறது.