Welcome to Jettamil

பயிற்சி பட்டதாரிகள் 10000 பேருக்கு இன்று தொடக்கம் நிரந்தர அரச நியமனம்..!

Share

பயிற்சி பட்டதாரிகள் 10000 பேருக்கு இன்று (22ம் திகதி) தொடக்கம் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தால் பயிலுனர்களாக இணைந்து கொள்ளப்பட்ட 14,000 பயிற்சி பட்டதாரிகளுள் 10,000 பேர் அரச சேவையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொள்ள விரும்புவதாக அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் கூறியுள்ளார்.

இவர்களுக்குரிய பயிற்சிக்காலம் நிறைவு அடைந்ததை அடுத்து குறித்த நியமனக் கடிதங்கள் மாவட்ட செயலக மட்டத்தில் இன்று (22ம் திகதி) இருந்து வழங்கப்படவுள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நிலமையில் நிரந்தர சேவைக்கு சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கையை திட்டமிட்டவாறு சிறப்பாக முன்னெடுக்க முடியவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

படித்த இளம் சமூகத்தை நமது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு ஆற்ற வைப்பதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்.

இதனால் படிப்பை மாத்திரம் அடிப்படைத் தகைமையாகக் கருதி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிரந்தர நியமனம் பெறும் பட்டதாரிகளின் பெயர் விபர பட்டியலை https://www.pubad.gov.lk/ எனும் இணையத் தளத்தில் பார்வையிட முடியும்.

மேலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் பண்ணி இணைந்து கொள்ளுங்கள்

Join viber

Join Whatsapp

Join Telegram

Join Facebook

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை