வடக்கு மாகாணத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (புதன்கிழமை) உறுதியாகியுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் என்றும் மற்றைய மூவரும் பூநகரியைச் சேர்ந்தவர்கள் என்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 491 பேரின் பி.சி.ஆர். பரிசோதனையிலேயே ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட 447 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளில் 3 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.