16 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும், பாடசாலையில் அதிபர் ஒருவரை ஓபநாயக்க பொலிஸார் இன்றைய தினம் (9_திகதி) கைது செய்தனர்.
கடந்த வாரம் 3 ஆம் திகதி பாடசாலை நிறைவடைந்த பின்னர் பாடசாலைக்குள் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக மாணவியின் தந்தை நேற்றைய தினம் ( 8) காலை முறைப்பாடு ஒன்றை அளித்ததாக ஓபநாயக்க பொலிசார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி மருத்துவப் பரிசோதனைக்காக பலாங்கொட ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி பல நாட்களாக அதிர்ச்சியால் அவதிப்படுவதைக் அவதானித்த பெற்றோர் அவரைப் விசாரித்துள்ளனர்.
மாணவி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக பெற்றோர் பொலிஸார் மற்றும் வலய கல்வி அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.
சந்தேகநபரான குறித்த பாடசாலை அதிபர் இன்று பலாங்கொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும், மற்றும் மாணவியின் மருத்துவ அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஓபநாயக்க பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.