Jet tamil
யாழ்ப்பாணம்

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீளமைக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அதே இடத்தில் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி கடந்த ஜனவரி 08ஆம் திகதி இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்கள், தமிழ் உணர்வாளர்கள் அரசியல் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டதோடு பல்கலை. மாணவர்கள் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் வெளிநாடுகளில் இருந்தும் கண்டனங்கள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில், கடும் அழுத்தத்தையடுத்து மீண்டும் நினைவுத் தூபியை அதே இடத்தில் அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வந்ததுடன் பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா கடந்த ஜனவரி 11ஆம் திகதி தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

தற்போது நினைவுத் தூபி கட்டுமானம் நிறைவடைந்ததை தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

Related posts

யாழில் இடம்பெற்ற சர்வதேச குடும்ப நல உத்தியோகத்தர் தின நிகழ்வு…!

Sinthu

வடக்கு மாகாண துறைசார் வல்லுநர்களுக்கு இடையிலான துடுப்பாட்டப் போட்டி

jettamil

யாழில் மடு அன்னையின் திருச்சொரூப வீதியுலா…

kajee

வலி.வடக்கிலிருந்து யாழ் நகருக்கான புதிய பேருந்து சேவை ஆரம்பம்…!

kajee

தெல்லிப்பழை பாடசாலையில் கார்த்திகைப் பூ விவகாரம் – பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை…!

kajee

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து : பரிதாபகரமாக பலியான விவசாயி

kajee

Leave a Comment