யாழ்ப்பாண மாநகர சபையின் பவளவிழா நிகழ்வு
யாழ்ப்பாண மாநகர சபையின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மாநகரசபையின் 75 ஆவது ஆண்டின் பவளவிழா இன்று யாழ்ப்பாண மாநகரசபையின் முன்றலில் யாழ்ப்பாண மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.
இவற்றில் 28 வட்டாரங்களில் 28 மாநகரமுதல்வர்கள் 17ஆணையாளர்கள் கடமையாற்றியவர்களில் மதிப்புரியவர்களாககாணப்படுகின்றனர்.
இதில் முன்னாள் மாநகர முதல்வராக கடமைபுரிந்த 04 மாநகரசபை முதல்வர்கள், முன்னாள் ஆணையாளர்கள், சமகாலத்தில் ஆணையாளராக கடமை புரிந்தவர்களுக்கு பவளவிருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ் நிகழ்வில் யாழ் மாநகர செயலாளர் த.தயாளன், பிரதமகணக்காளர் திருமதி.ம.வசந்தமாலா உள்ளிட்ட மாநகரசபை பதவிநிலை அதிகாரிகள், சுகாதாரப் பணியாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.