Jet tamil
இலங்கை

லிபியாவில் கொவிட்-19 தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்…

thumbs b c d89239c8cd124e36334fbe0f50cf2f7a 720x450 1

லிபியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, லிபியாவில் இதுவரை ஒரு இலட்சத்து ஆயிரத்து 348பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 78ஆவது நாடாக விளங்கும் லிபியாவில், இதுவரை ஒரு இலட்சத்து 21ஆயிரத்து 243பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 914பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 809பேர் பாதிக்கப்பட்டதோடு 18பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 17ஆயிரத்து 981பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment