வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர்.
ஆனாலும் பெரும்பலான மக்கள் வாட்ஸ்அப் செயலியை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை குறிப்பாக வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கையை அறிவித்த பின்னர் நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதேபோல் இந்த தனியுரிமை கொள்கையை செயல்படுத்த தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு, வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை பதிளிக்குமாறு உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தது.
குறிப்பாக இந்த மனு விசாரணையின் போது, பணத்தை விட தனிப்பட்ட தகவல்களை இந்திய மக்கள் பெரிதாக கருதுகின்றனர். பின்பு மக்களின் தனியுரிமையை பாதுகாக்க நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என்ற கருத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான் என்பவர், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் தனிமனித அந்தரங்க பாதுகாப்பு உரிமையை வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியர்களுக்கு குறைவாக அளிக்கிறது.
இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்களை பேஸ்புக்குடன் பகிர்வதற்கு தடை விதிக்கப்பட வேண்டும். பின்பு மார்ச் 15-ம் தேதி முதல் புதிய கொள்கை முடிவுகள் அமலுக்கு வர உள்ளன. மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வரும் வரை வாட்ஸ்அப் செயலியின் புதிய கொக்கை முடிவுகள் அமல்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.
அதன்பின்பு மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷர் மேத்த என்பவர், இது நாட்டில் உள்ள அனைவரின் முக்கிய பிரச்சனையாகும். தகவல்களை யாருக்கும் பகிர வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அனமதி தரக் கூடாது. இந்தியாவின் சட்டத்திட்டங்களை அந்த நிறுவனம் கட்டயாம் கடைபிடிக்க வேண்டும் என்று கூறினார்.
வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபில் கூறியது என்னவென்றால், ஐரோப்பாவில் தகவல் பாதுகாப்புக்காக தனியாக ஒழுங்குமுறைச் சட்டம் அமலில் உள்ளது. இதுபோன்ற ஒரு சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினால் வாட்ஸ்அப் நிறுவனம் பின்பற்றும்.
அதேபோல் புதிய கொள்கை முடிவுகளில் எந்தவித பாரபட்சம் காட்டப்படவில்லை. மேலும் ஐரோப்பாவைத் தவிர பிற நாடுகளில் ஒரே மாதிரியான கொள்கை முடிவுகளை வாட்ஸ்அப் செயல்படுத்துகிறது என்று கூறினார்.
தகவல்களை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும் இந்த இரண்டு தரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வாட்ஸ்அப் தனிமனித தகவல்கள் அவ்வளவு பாதுகாப்பாக இல்லை என்ற அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
குறிப்பாக இதுபோன்ற தகவல்களை பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். அதேபோல் மூன்று டிரில்லியன் டாலர் மதிப்பு மிக்க நிறுவனமாக வாட்ஸ்அப் இருந்தாலும், தனிமனித தகவல்கள் என்பது பணத்தை விட மேலானது.
மேலும் இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தொடர்நது கவனிக்கும். இது குறித்து மத்திய அரசும், வாட்ஸ்அப் நிறுவனமும் நான்கு வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்று உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.