வார இறுதி நாட்களில் டெல்லியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்தும் முகமாக மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படும்.
அதேநேரம் வார இறுதி நாட்களில் செயற்பட்ட சந்தைகள் இனி வார நாட்களில் செயற்படும்.
வார இறுதி நாட்களில் உணவகங்களில் டெலிவரி சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.