நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள ‘தளபதி 65’ திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.