Welcome to Jettamil

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

Share

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத், கடந்த 2006-ஆம் ஆண்டு கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02.04.2026) உத்தரவிட்டுள்ளது.

சட்ட மா அதிபரின் அதிகாரப்பூர்வ ஆலோசனை கிடைக்கும் வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் இதன்போது பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்ட பிள்ளையான், சுமார் 359 நாட்கள் தொடர்ச்சியாகத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டமை மட்டக்களப்பு மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னதாக இடம்பெற்ற பேராசிரியர் ரவீந்திரநாத்தின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது வேகம் பெற்றுள்ளன.

இந்தக் கடத்தல் விவகாரத்தில் பிள்ளையானின் நேரடித் தொடர்பு மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து சி.ஐ.டி (CID) அதிகாரிகள் நீதிமன்றத்தில் விரிவான அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை