அம்பாறை பொத்துவில் பகுதியில் இருந்து இளம் வயது சிறுமியை கூட்டி வந்து முல்லைத்தீவு உள்ள சிலாவத்தை பகுதியில் குடும்பம் நடத்திய நபரொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
அம்பாறை பொத்துவில் கிராமத்தில் வசித்து வந்த இளைஞன் தனது காதலியான 14 வயதுடைய இளம் சிறுமியை அழைத்துச்சென்று முல்லைத்தீவில் உள்ள சிலாவத்தை மாதிரிகிராமப் பகுதியில் குடும்பம் நடத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த சிறுமியின் பெற்றோர் அம்பாறை பொத்துவில் பகுதி பொலிசாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ததைத் தொடர்ந்து, பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த சிறுமியுடன் குடும்பம் நடத்திய நபரையும் சிறுமியையும் கைது செய்துள்ளனர் .