Welcome to Jettamil

14 மில்லியன் ஈரானியர்கள் நாட்டுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய தயார் – ஈரான் அறிவிப்பு

Share

14 மில்லியன் ஈரானியர்கள் நாட்டுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய தயார் – ஈரான் அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணையைத் (Strait of Hormuz) திறக்காவிட்டால் ஈரானின் மின் நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த கெடு இன்றுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில்தான், தன்னையும் சேர்த்து சுமார் 14 மில்லியன் ஈரானியர்கள் நாட்டுக்காகத் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்ய முன்வந்துள்ளதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியன் (Masoud Pezeshkian) அறிவித்துள்ளார். “நானும் ஈரானுக்காக என் உயிரைக் கொடுக்கத் தயாராகவே இருக்கிறேன்” என அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

எந்த ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால் ஈரான் எனும் முழு நாடும் அழிக்கப்படும் என டொனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இது ஈரானிய உளவுத்துறை மற்றும் இராணுவ மட்டங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் இந்த அச்சுறுத்தல்கள் வெறும் “மாயை” (Delusional) என ஈரானின் உயர்மட்டக் கூட்டு இராணுவக் கட்டளைப் பணியகம் சாடியுள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்கா சந்தித்துள்ள அவமானத்தை மறைக்கவே ட்ரம்ப் இவ்வாறு மிரட்டுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

உலகளாவிய எரிபொருள் விநியோகத்தின் முக்கியப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளதால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், காதம் அல்-அன்பியா (Khatam al-Anbiya) தலைமையகத்தின் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று நள்ளிரவுக்குள் தீர்வு எட்டப்படாவிட்டால், வளைகுடாப் பகுதியில் பாரிய போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் என்ற நாடு இல்லாமல் போகும் என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததற்கு பின்னால் அமெரிக்கா அணுகுண்டுகளை பிரயோகிக்க போகின்றதா என்ற அச்சநிலைமை ஏற்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை