Welcome to Jettamil

மட்டக்களப்பை போன்று யாழ்ப்பாணத்திலும் கிணற்றுக்குள் சடலம் கண்டெடுப்பு

Share

மட்டக்களப்பை போன்று யாழ்ப்பாணத்திலும் கிணற்றுக்குள் சடலம் கண்டெடுப்பு

யாழ்ப்பாணம், மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (07.04.2026) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்ணை ஊழியர்கள் இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் யார்? அவர் எப்படி கிணற்றுக்குள் விழுந்தார்? என்பது குறித்துப் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

உயிரிழந்த நபருக்குச் சொந்தமானது எனச் சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்று, சடலம் மீட்கப்பட்ட கிணற்றுக்கு அருகாமையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தற்கொலையா அல்லது விபத்தா? என்ற கோணத்தில் சுன்னாகம் பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உயிரிழந்த நபர் குறித்த எந்தவித விபரங்களும் இதுவரை கிடைக்காத நிலையில், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு சுன்னாகம் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை