Welcome to Jettamil

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளது – அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச கடும் குற்றச்சாட்டு

Share

திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் டொலர் பணம் காணாமல் போயுள்ளது – அரசாங்கத்தின் மீது சஜித் பிரேமதாச கடும் குற்றச்சாட்டு

அரசாங்கத்திற்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் திறைசேரியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.

வெளிநாட்டுக் கடன் தவணை ஒன்றைச் செலுத்தும் போது, உரிய சரிபார்ப்புகளை மேற்கொள்ளாமல் அரசாங்கம் செயற்பட்டதே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹேக்கர் ஒருவரின் போலியான தகவல்களை நம்பி இந்தத் தொகை செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் விளைவாகப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கப் பணத்தைச் சூறையாட ஹேக்கர்களுக்கு வழிவகுத்த அதிகாரிகள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை