Jet tamil
உலகம்

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

24 6663747b17e14

சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 7 பேர் பலி

வடமேற்கு சிரியாவில் உள்ள தர்குஷ் நகருக்கு அருகே பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் குழந்தைகள் உட்பட 20 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ஆதரவற்றோர்கள் பள்ளியில் இருந்து மாணவர்கள் மற்றும் சில ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

ஒராண்டஸ் ஆற்றங்கரை வழியாக மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தாக்கில் உள்ள ஆற்றில் விழுந்தது.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

மலை குன்றின் ஓரம் மற்றும் ஆற்றில் மீட்புக் குழுக்கள் சுமார் 6 மணி நேரம் தேடி வருவதாக உள்ளூர் சிவில் பாதுகாப்பு தெரிவித்துள்ளது.

பேருந்து சாலையை விட்டு விலகியமைக்கான காரணம் இது வரை தெரியவராததால் மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

Related posts

நெதன்யாகுவை கைது செய்ய தயாராகும் கனடா

jettamil

வடகொரியாவுக்கு 70க்கும் மேற்பட்ட விலங்குகளை பரிசாக வழங்கிய ரஷ்யா!

Sinthu

“ரஷ்யா உக்ரைனில் ‘பாரிய’ வான்வழித் தாக்குதல்: மின் கட்டிடத்திற்கு கடுமையான சேதம்”

jettamil

வாடகை வீடு தேடுவோரின் எண்ணிக்கை அதிகர்ப்பு

kajee

விண்வெளிக்கு மீன் குழம்பை எடுத்துச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்

jettamil

75 ஆண்டுகளுக்குப் பின்னர் ஐக்கிய அரபு நாடுகளில் வெள்ளப்பெருக்கு!

jettamil

Leave a Comment