Jet tamil
இலங்கை

8 மாதங்களேயான குழந்தையை அடித்து துன்புறுத்திய தாய் !

baby e1614666348722

யாழ் நகரில் 08 மாதங்களேயான குழந்தையை அடித்து துன்புறுத்தியதன் குற்றச்சாட்டின் பேரில் தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நல்லூர் பிரதேசசெயலக அதிகாரிகள் மற்றும் யாழ் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்றையதினம் (செவ்வாய்க்கிழமை) காலை சென்று குறித்த கொடூர தாயாரை கைது செய்தனர்.

குறித்த விசாரணைகளின் பின்னர் யாழ் சிறுவர் நீதிமன்றில் தாயார் முற்படுத்தப்படுவார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அந்தப் பெண்ணின் கணவர் தொழிலுக்காக வெளிநாடு சென்ற நிலையிலேயே அக் குழந்தையை எப்போதும் அடித்துத் துன்புறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணின் சகோதரன் குழந்தையை துன்புறுத்தப்படுவதை காணொளிப் பதிவு மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை விசாரணையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த அந்தப் பெண்ணை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இன்றைய (06.12.2024) இரண்டாவது நாள் இடைக்கால பாதீட்டுத் திட்ட விவாதம் – நேரலை

jettamil

பசில் அமெரிக்காவில் இருந்து திரும்பவில்லை – SLPP இல் பதவி மாறுதல் விவாதங்கள்

jettamil

இன்று முதல் எரிபொருள் விலைகள் மாற்றம்!

jettamil

மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களை உடனே கைது செய்ய கடும் அழுத்தம்

jettamil

மட்டக்களப்பில் சர்வதேச எய்ட்ஸ் தின விழிப்புணர்வு ஊர்வலம்

jettamil

முடங்கிய லாஃப் எரிவாயு விநியோகம் – அரசாங்கத்தின் கடும் எச்சரிக்கை

jettamil

Leave a Comment