கம்பளைச் சிறுமி கொலை: சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு!
கம்பளையில் சிறுமி ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சிறுமி தொடர்பான சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.
உயிரிழந்தவர் 27 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் திருகோணமலையில் தொழில் புரிந்து வந்த நிலையில், நேற்றிரவு (நவம்பர் 14) வீடு திரும்பியுள்ளார்.
கொலையாளியைக் கைது செய்யக் கம்பளைக் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், குறித்த சந்தேகநபர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாகக் கம்பளைக் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





