Welcome to Jettamil

யாழில் வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: ரூ. 25,000ஐ விரைவாக வங்கியில் வைப்பிலிடுமாறு உத்தரவு!

Share

யாழில் வெள்ள நிவாரணக் கொடுப்பனவு: ரூ. 25,000ஐ விரைவாக வங்கியில் வைப்பிலிடுமாறு உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட உலர் உணவு நிவாரணக் கொடுப்பனவு மற்றும் ரூ. 25,000.00 பணக் கொடுப்பனவுகளை விரைவாக வழங்குவது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலாளர்களுடன் நிகழ்நிலை ஊடாகக் கலந்துரையாடினார்.

கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடுப்பனவுகளை வழங்குவது குறித்துப் பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார்:

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஒரே சீரான நடைமுறைகளைப் பின்பற்றிப் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட வேண்டும்.

கிராம மட்ட உத்தியோகத்தர்கள் உரிய படிவத்தினை நிரப்பி அளித்த பின்னர், கிராம மட்ட அலுவலர்களோ பிரதேச செயலாளர்களோ கொடுப்பனவை வழங்குவதற்குக் கால நீடிப்பை மேற்கொள்ள வேண்டியதில்லை.

வீட்டு உரிமை இல்லாதவர்களுக்கும் அல்லது தற்போது வசிக்கும் பிரிவுக்குரிய குடும்பப் பதிவு அட்டை இல்லாதவர்களுக்கும் கிராம மட்ட உத்தியோகத்தர்களின் பொருத்தமான உறுதிப்படுத்தலுடன் கொடுப்பனவு வழங்கலாம்.

ரூபா 25,000.00 கொடுப்பனவு மற்றும் உலர் உணவுகள் வழங்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களின் முதலாம் கட்ட பெயர்ப் பட்டியலை இன்று முதல் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகுதியானவர்களின் பட்டியல்களைக் காட்சிப்படுத்திய பின்னர், காலதாமதம் இன்றி உரிய வங்கி கணக்கிற்குப் பணத்தை விரைவாக வைப்பிலிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பேரிடரால் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் யாழ்ப்பாண மாவட்டமும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் சுற்றறிக்கைகள் மற்றும் வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை 08 /2025 ஆகியவற்றின் பிரகாரம் இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை