உயர்தரப் பரீட்சை மீண்டும் ஆரம்பம்: புதிய கால அட்டவணையை வெளியிட்டது பரீட்சைத் திணைக்களம்!
அனர்த்த நிலைமைகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான புதிய திகதிகளைப் பரீட்சைகள் திணைக்களம் இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மீள ஆரம்பமாகும் திகதி: எதிர்வரும் ஜனவரி 12-ஆம் திகதி (திங்கட்கிழமை).
பரீட்சை முடியும் திகதி: ஜனவரி 20-ஆம் திகதி வரை தேர்வுகள் நடைபெறும்.
நாடு முழுவதும் உள்ள 2,086 மையங்களில் ஏற்கனவே திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும். அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையங்களுக்குப் பதிலாக மாற்று இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்த அனுமதி அட்டைகளையே (Admission Cards) எஞ்சிய பாடங்களுக்கும் பயன்படுத்த முடியும். புதிய அட்டைகள் தேவையில்லை.
திருத்தப்பட்ட விரிவான கால அட்டவணையை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.





