பேரிடரால் அழிந்த வீடுகளுக்கு ஜனாதிபதி அநுரவின் ‘புதிய வீடுகள்’ திட்டம் இன்று ஆரம்பம்!
சமீபத்திய சூறாவளிப் பேரிடரால் வீடுகளை இழந்த மக்களுக்காக, “இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்” திட்டத்தின் கீழ் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (09) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.
இன்று முதற்கட்டமாக அநுராதபுரம் (கல்னேவ, ராஜாங்கனய) மற்றும் குருநாகல் (நிக்கவெரட்டிய, ரிடிகம) மாவட்டங்களில் கட்டுமானப் பணிகள் தொடங்குகின்றன.
அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 6,500 வீடுகள் முழுமையாக அழிந்துள்ளன. மேலும் 113,000 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
முதற்கட்டமாக, ஏற்கனவே சொந்தமாக நிலம் வைத்திருக்கும் மற்றும் வீடுகளை முழுமையாக இழந்த குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக தெரிவித்துள்ளார்.






