பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10 மில்லியன் பாரிய நிதித் தொகையை கையளித்த லண்டன் வாழ் தமிழ் தொழிலதிபர்!
டிட்வா’ புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், சேதமடைந்த பகுதிகளை மீளக் கட்டியெழுப்பவும் லண்டன் வாழ் ஈழத்தமிழ் தொழிலதிபர் ஒருவர் 10 மில்லியன் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இங்கிலாந்தில் பிரபல நகையகம் ஒன்றின் உரிமையாளரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகருமான வேலுப்பிள்ளை சிவசுந்தரம் என்பவரே இந்த பாரிய நிதியுதவியை வழங்கியுள்ளார்.
இலங்கையை மீளமைக்கும் நிதி’ (Rebuilding Sri Lanka Fund) திட்டத்திற்காக, 10 மில்லியன் ரூபாய்க்கான காசோலையை நேற்று (11.01.2026) ஜனாதிபதியின் செயலாளர் நந்திகா சனத் குமணாயக்கவிடம் அவர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.
இயற்கை பேரழிவால் சிதைந்த பகுதிகளை மறுசீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவவும் இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
பேரிடர் காலங்களில் தாயக உறவுகளுக்காக புலம்பெயர் தொழிலதிபர்கள் முன்னின்று உதவும் இந்தச் செயல் பரவலான பாராட்டுக்களைப் பெற்று வருகின்றது.





