லண்டனில் பட்டப்பகலில் நகைக்கடை உடைத்துக் கொள்ளை – செய்வதறியாது வேடிக்கை பார்த்த மக்கள்
ரிச்மண்டின் பரபரப்பான வர்த்தகப் பகுதியில் அமைந்துள்ள ஒரு நகைக்கடையில், கடந்த வாரம் முகமூடி அணிந்த இருவர் ஆயுதமேந்திய கொள்ளையில் ஈடுபட்டனர். முகமூடி அணிந்து வந்த அந்த மர்ம நபர்கள், பெரிய சுத்தியலால் கடையின் காட்சி ஜன்னலைத் தொடர்ச்சியாக அடித்து உடைத்துள்ளனர்.
கொள்ளையர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டிருந்த போதே, கடையின் உள்ளே இருந்த உரிமையாளர்கள் துணிச்சலுடன் செயற்பட்டுள்ளனர். கொள்ளையர்களின் கைகளுக்கு எட்டும் தூரத்தில் இருந்த நகைகளை அவர்கள் வேகமாகப் பறித்து உட்புறமாகப் பாதுகாக்க முயன்றனர். இருப்பினும், ஒரு நிமிடத்திற்குள் தங்களால் முடிந்த அளவு நகைகளைச் சூறையாடிக்கொண்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
பட்டப்பகலில், பொதுமக்கள் முன்னிலையிலேயே இந்தச் சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




